மாராப்பட்டு பாலாற்றில் தோல் தொழிற்சாலையின் ரசாயன கழிவுநீர் கலந்ததால் மீன்கள் இறந்ததாக பொதுமக்கள் சாலை மறியல்!
வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாரப்பட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் மீன்கள் இறந்த நிலையில் மிதந்தன அதை கண்ட அப்பகுதி பொது மக்கள் மற்றும் விவசாயிகள் இறந்து போன மீன்களை பாலத்தின் மீது எடுத்து போட்டு சாலை மறியல் ஈடுபட்டனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது வலையாம்பட்டு, கிரிசமுத்திரம் ,மாராப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள நீர்நிலைகளில் உள்ள நீர்கள் மனித உபயோகத்துக்கு ஏற்றதாக இல்லை மற்றும் பாலாற்றில் வாணியம்பாடி பகுதியில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகளால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படுகின்றன மழைக்காலங்களில் ரசாயனம் கலந்த கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் ஆற்று நீருடன் கலப்பதுதான் இதற்கு காரணம் என்றும் முக்கியமாக வாணிடெக் தொழிற்சாலையில் இருந்து அதிகப்படியான கழிவு நீர் வெளியேறுவதால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேலும் ரசாயனம் கலந்த நீரை அப்படியே வெளியேற்றுவதால் விலை நிலங்கள் போதுமான விளைச்சல் இல்லாமல் மலடாக உள்ளது நிலத்தடி நீர் மாசுபட்டு மனிதர்கள் உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிலத்தடி நீரை உபயோகிக்கும் மனிதர்களுக்கு பக்க விளைவுகளாக கண் பார்வை மங்குதல், முடி உதிர்தல், கால்களில் வீக்கம் மற்றும் தோல் வியாதிகள் ஏற்படுவதாகவும் புகார் கூறுகின்றனர் இவற்றை தடுக்க வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மௌனம் காத்து வருவதன் பின்னணி என்ன? தோரண முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் இருக்க வாணியம்பாடியில் இயங்கி வரும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு தோல் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் இருந்து மாதா மாதம் ஒரு பெரும் தொகையை லஞ்சமாக பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்படுவதாகவும் கிராம மக்கள் குறை கூறுகின்றனர்.
இவற்றையெல்லாம் மீறி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு இது போன்ற செய்திகள் சென்றால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு
தொழிற்சாலையில் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது ஒரு வாரம் பத்து நாட்களில் மின் இணைப்பு மீண்டும் கொடுக்கப்படுகிறது ஆகவே இந்த தண்டனையால் அவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏதுமில்லை இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே பொதுமக்களின் வாழ்வாதாரங்களையும் விவசாயிகளின் வாழ்வாதாரங்களின் காக்க முடியும் ஆகவே தற்போது பருவ மழை தொடங்க உள்ள நிலையில் இது போன்ற விதி மீறல்கள் அதிகமாக நடைபெற வாய்ப்பு உள்ளது ஆகவே மாவட்ட நிர்வாகம் இவற்றை முறையாக கண்காணித்து வரும் காலங்களில் ரசாயனம் கலந்த கழிவுநீரை பாலாற்றில் விட எவரும் முயல கூடாது அது போன்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதியில் வாழும் கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
பொதுமக்களின் சாலைமறியல் குறித்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதன் எதிரொலியாக தகவல் அறிந்த வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(வாணியம்பாடி-சிறப்பு நிருபர்)
