லஞ்சப் பணத்தில் புரளும் வாணியம்பாடி சார் பதிவாளர் யாகியாக்கன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினரின் பார்வைப்படுமா !
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக பொறுப்பேற்றவர் யாகியாக்கன் இவர் முதல் முறையாக வாணியம்பாடியில் தான் பத்திரப்பதிவாளராக பணியில் அமர்த்தப்பட்டுள்ளார் 5 மாதங்களுக்கு முன்பு பணியில் அமர்த்தப்பட்ட இவர் வந்த புதிதில் தான் மிகவும் நேர்மையானவராக காட்டிக்கொண்டு அலுவலகத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறக் கூடாது என நேர்மையானவராக காட்டிக்கொண்டார் இரண்டு மாதங்களில் அலுவலக வேலைகளில் நெளிவு சுழிவுகளையும் எவ்வாறெல்லாம் லஞ்சமாக பணத்தை சம்பாதிக்க முடியும் என தெரிந்த கொண்டு கலெக்க்ஷனில் இறங்கிவிட்டாராம் வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு நாளைக்கு சுமாராக 40 முதல் 75 பத்திரங்கள் வரை பத்திரப்பதிவு நடைபெறுகிறது இந்த பத்திரப்பதிவுகளின் போது அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ள நிலையில் ஒரு பத்திரப்பதிவுக்கு ரூபாய் 2000 வீதமும் சில குறைபாடுகள் (அட்ஜஸ்ட்மென்ட்) உள்ள பத்திரப்பதிவுகளுக்கு சுமார் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கராராக வாங்கி விடுவாராம் மேலும் இவர் அலுவலகத்தில் எவரிடமும் பணம் பெறுவது இல்லையாம் பத்திர பதிவு எழுத்தாளர்களிடம் ஒவ்வொருவருடைய பத்திர பதிவு ஒரு நாளைக்கு எத்தனை நடந்ததோ அதை கணக்கில் குறித்து வைத்துக் கொண்டு அலுவலகம் முடிந்து மாலைவெளியே சென்ற பின்னரே பணத்தை பெறுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன அவ்வாறு கணக்கிடும் போது இவருடைய மாதச் சம்பளத்தை விட லஞ்ச பணத்தின் தொகை பல மடங்காக உள்ளது என பத்திரப்பதிவு அலுவலக வட்டாரங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே லஞ்ச ஒழிப்பு துறையினர் சார்பதிவாளர் யாகியாகானின் வீடு மற்றும் அவருடைய ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் சோதனை மேற்கொண்டால் வருமானத்தை தவிர்த்து லஞ்சமாக பெற்ற பணத்தில் வாங்கி குவித்திருக்கும் அசையும் அசையா சொத்துக்கள் சிக்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன லஞ்ச ஒழிப்பு துறையினரின் பார்வை வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தின் மீது படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்
(சிறப்பு நிருபர்-வாணியம்பாடி)
