தமிழ்நாடு கனசதுர சங்கத்தின் சார்பில் பல்வேறு கன சதுரத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகார சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

சென்னை:
தமிழ்நாடு கனசதுர சங்கத்தின் சார்பில் பல்வேறு கன சதுரத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகார சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரிலுள்ள வாணி மகால் உள் அரங்கில் இச்சங்கத்தின் நிறுவனர் பிந்து பிரியங்கா அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

மேலும் தமிழ்நாடு கன சதுர சங்கத்தின் தலைவர் முனைவர் சந்திரிக்கா மற்றும் பொருளாளரும், ரூபிக் கியூப் பயிற்சியாளருமான ஆனந்த் ராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்ற இவ்விழாவில் ஆச்சி மசாலா குழுமத்தின் நிறுவனத்தலைவர் பத்மசிங் ஐசக்,நாசரேத் ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஆச்சி மேலாண்மை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின்
நிர்வாக இயக்குநர் தெல்மா ஐசக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கின்னஸ் உலக சாதனை அங்கீங்கார சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தினர்.

மேலும் ஒரே நேரத்தில் சுழலும் புதிர் க்யூப்களை ஆன்லைனில் 1289 குழந்தைகள் தீர்த்தனர் ஆனால் 558 குழந்தைகள் புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளனர்.

இதில் தமிழ்நாடு பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த குழந்தைகள், மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுடன் பங்கேற்று கின்னஸ் உலக சாதனை அங்கீகார சான்றிதழ் பெற்று மகிழ்ந்தனர்.

தமிழ்நாடு கனசதுர சங்கம் பற்றி ஓர் பார்வை:
தமிழ்நாடு கனசதுர சங்கம் என்பது தமிழ்நாடு முழுவதும் போட்டிகளை நடத்தும் ஒரு சிறந்த சங்கம். ரூபிக்ஸ் க்யூப் என்று மிகவும் பிரபலமாக அழைக்கப்படும் புதிர்களைத் தீர்ப்பதில் மிகவும் வேடிக்கையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

ரூபிக் கனசதுரத்தின் நன்மைகள், இடம் சார்ந்த சிந்தனை களை மேம்படுத்துவதாகும். இது ஒரு மாயாஜால புதிர், இது கண்கள் மூளை மற்றும் கைகளை ஒரே நேரத்தில் ஒன்றாக வேலை செய்ய உதவும், இது செறிவை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் எண்ணங்களை விரைவாக செயலாக்க முடியும் என்பதை உறுதி செய்கின்றது.

போதைப் பழக்க வழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி இந்த புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்தோம், அதன் முடிவுகள் ஜனவரி 2023 இல் அறிவிக்கப்பட்டன. இந்தச் சிறிய நடவடிக்கையை எடுத்துக்கொள்வதன் மூலம் நமது சமூகத்தை போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி முன்னேற்றுவோம் என்று நம்புகிறோம்.

உலகெங்கிலும் உள்ள 1197 மாணவர்களின் பங்கேற்புடன் ஒரே நேரத்தில் சுழலும் புதிர் க்யூப்ஸை தீர்த்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளோம். உலகெங்கிலும் உள்ள 558 மாணவர்கள் ஒரு நிமிடத்திற்குள் பணியை முடித்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்கள் குழந்தைகளும் சாதனையாளர்களாக மாற வேண்டுமா? தொடர்பு கொள்ளவும்: தமிழ்நாடு கியூப் அசோசியேஷன்-073389 67178
