அறம் செய்ய விரும்பு அறக்கட்டளையின் அறம் விருதுகள்-2023:அலையென எழுவோம்-தலையென வாழ்வோம் நற்பணி இயக்கத்தின் தலைவருக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி கௌரவிப்பு!
சென்னை:அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் விருதுகள் வழங்கும் விழா ஆழ்வார்பேட்டை நாரத கானா சபாவில் இதன் நிறுவனர் நல்ல மணி அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கே. பாக்யராஜ் மற்றும் நகைச்சுவை நடிகர் மதன்பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.


இந்த அறக்கட்டளையின் நிறுவனர் நல்லமணி அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்ற இவ்விழாவில் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு சமூக சேவகர் விருது, நல்லாசிரியர் விருது,தொழில் முனைவோர் விருது மற்றும் இளம் தொழில் முனைவோர் விருது, சாதனையாளர் விருது மற்றும் இளம் சாதனையாளர் விருது உள்ளிட்ட தலைப்புகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் சென்னை, போரூரை சேர்ந்த ஷியாம் சுந்தர் அவர்களுக்கு நற்பணி இயக்கத்தின் மூலமாக ஏழை’எளிய மக்களுக்கு மனித நேய சேவையை கௌரவிக்கும் விதமாக சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.

இந்த விருது பெற்றதற்கு இவரது குடும்பத்தினர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
