சென்னை:அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் விருதுகள் வழங்கும் விழா ஆழ்வார்பேட்டை நாரத கானா சபாவில் இதன் நிறுவனர் நல்ல மணி அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.
எளியவர்களுக்கு உணவு வழங்கி வருவதை லட்சியமாக கொண்டு இயங்கிவரும் ஹரிஹரன்:விருது வழங்கி பெருமை படுத்திய அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை!
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கே. பாக்யராஜ் மற்றும் நகைச்சுவை நடிகர் மதன்பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு சமூக சேவகர் விருது, நல்லாசிரியர் விருது,தொழில் முனைவோர் விருது மற்றும் இளம் தொழில் முனைவோர் விருது, சாதனையாளர் விருது மற்றும் இளம் சாதனையாளர் விருது, சேவா ரத்னா விருது,இளம் கவிஞர் விருது, இளம் ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட தலைப்புகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் சென்னை பட்டாளம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் அவர்கள் வறுமையில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருவதை கௌரவிக்கும் விதமாக சிறந்த சமூக சேவையாளர் விருது வழங்கப்பட்டது.

