அறம் செய்ய விரும்பு அறக்கட்டளையின் அறம் விருதுகள் 2023:முனைவர் ஜெயபாலன் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி கௌரவம்! 

சென்னை:அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் விருதுகள் வழங்கும் விழா ஆழ்வார்பேட்டை நாரத கானா சபாவில் இதன் நிறுவனர் நல்ல மணி அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது. 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கே. பாக்யராஜ் மற்றும் நகைச்சுவை நடிகர் மதன்பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். 

மேலும் இந்நிகழ்வில் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு சமூக சேவகர் விருது, நல்லாசிரியர் விருது,தொழில் முனைவோர் விருது மற்றும் இளம் தொழில் முனைவோர் விருது, சாதனையாளர் விருது மற்றும் இளம் சாதனையாளர் விருது உள்ளிட்ட தலைப்புகளில் விருதுகள் வழங்கப்பட்டன. 

மேலும் இந்நிகழ்வில் குரோம்பேட்டை அஸ்தினா புரத்தை சேர்ந்த முனைவர் ஜெயபாலன் அவர்களுக்கு கொரோனா காலத்தில் சாலையோரத்தில் உணவில்லாமல் தவித்தவர்களுக்கு உணவு வழங்கியதற்காக சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.