ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் திருவள்ளுர் மாவட்ட ஆலோசனை கூட்டம்!
பெரியபாளையம்: ஆர்.சி.எச் (R.C.H) துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம் பெரியபாளையம் பகுதியில் மகாலெட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில். மாநில தலைவர். மனித நேயர் முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் நீண்ட கால கோரிக்கைகளான ஊதிய உயர்வு,பணி நிரந்தரம்,ஊதிய நிலுவை, பணி பாதுகாப்பு, மருத்துவமனை பணியாளராக. பணி மாறுதல். உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இறுதியில் வினோ நன்றியுரை நல்கினார்.
