சென்னை – ஏப்ரல்,17,2020:

ஊக்குவிப்பதிலும்.
உதவுவதிலும் உச்சம் தொட்ட சமூக சேவகர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தன்னுடன் பயணித்த சாதனை மனிதர்களை பற்றி பகிர்ந்துக்கொள்கிறார்.

இதன் சிறப்பு சாமானிய மனிதர்களாக இருந்து பல சாதனைகள் சமூக பணிகள் செய்யும் நல்ல உள்ளங்கள் பற்றிய கட்டுரை விரைவில் உங்கள் யூகம் நியூஸ் மின்னிதழில்….

ஜோசப் இளந்தென்றல்” இந்த பெயர் சமுக ஆர்வலர்களுக்கும், தன்னம்பிக்கையோடு வாழ்வில் சாதிக்க துடிக்கும் மாணவ , மாணவியருக்கும், இளைஞர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் உற்சாகம் தரும் மா மருந்து இவரது அன்பையும், பாராட்டையும், நிச்சயம் மகிழ்ச்சியுடன் கடக்காமல் இருக்க முடியாது. பள்ளி பருவத்திலயே பேச்சு போட்டி, கவிதை போட்டி வினாடி வினா,கட்டுரை என தன்னை ஈடுபடுத்தி கொண்டவர் . மாவட்ட மாநில அளவில் பல்வேறு சான்றிதழ்களை பெற்றிருக்கிறார் .

இவர் தனது 14 வயதில் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தில் ஈடுபடுத்தி கொண்டு இன்று வரை தன் வாழ்வில் ஒரு பகுதியாக சமூக பணியினையும் முழு மனதுடன் ஆற்றுப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருகிறார் இவர் தனது சமூக பணியில் 19ஆம் ஆண்டினை நெருக்கி கொண்டிருக்கிறார்.

கிராம அளவில் துவங்கிய மனித உரிமைகள் பணி இன்று சர்வதேச அளவில் இவரது கருத்தரங்குகள் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரை சமூக சேவை, கல்வி, மருத்துவ பணி, சாதனையாளர்கள் என 3000க்கும் மேற்பட்டோரை கௌரவ படுத்தியும்,அடையாளப்படுத்தி யும் இருக்கிறார்.

சமூக பணியில் சென்னை மழை வெள்ளம், வர்தா புயல் , கேரளா வெள்ளம் தற்போது கோரானா ஊரடங்கு என பல்வேறு பணிகளை சோர்வுறாமல் செய்து வருகிறார்.

மனித உரிமைகள் , பொருளாதார முன்னேற்றம் சமூக மேம்பாடு , உறவுகளை பேறுதல் , குடும்ப சமாதானம் , பிறரை ஊக்குவித்தல் ஆகியவற்றில் முழு ஈடுபாடு கொண்ட இவர் 2012ஆம் ஆண்டு சோசியல் புரொடக்ஷன் அமைப்பினை துவங்கி இன்று வரை , துறை சார் நிபுணத்துவ பெற்றவர்களை வைத்து , சட்ட ரீதியாக வழி காட்டுதல், உளவியல் ரீதியான ஆலோசனை ,சமூக ரீதியான முன்னேற்றம் , போன்றவற்றை வழங்கி வருகிறார் .

இவரது பணிகளை பாராட்டி ஐ .நா வில் அங்கம் வசிக்கும் UPF நிறுவனம் ஜோசப் இளந்தென்றல் அவர்களுக்கு உலக சமாதான தூதுவர் அந்தஸ்த்தை வழங்கியும், DUU அமைப்பு உலகளாவிய மனித உரிமைகளுக்கான தூதராகவும் நியமித்து கௌரவித்துள்ளது.

SOCIAL PROTECTION TRUST, STANDARD INDIA BUSINESS SOLUTION, SPT INTERNATIONAL ACHIEVER ACADEMY, ஆகியவற்றின் நிர்வாக பணிகளையும் கவனித்து வருகிறார்

கவிதை, சினிமா விமர்சனம், அரசியல் ஈடுபாடு, ஆற்றுப்படுத்தும் பணி, இறை பணி, ஊட்டசத்து ஆலோசகர், திருமண தனி பதிவர் என பரப்பாக இயங்கி வருகிறார். உடல் ஆரோக்கியம் , இறைபக்தி, செல்வசெழிப்பு, அன்பு, உறவுகள் என யாவும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பதே இவரது எண்ணம்

வாழ்வை பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாக பல மாற்றங்களை நிகழ்த்தி வரும் ஜோசப் இளந்தென்றல் தற்போது நமது யுகம் நியூஸ் மின்னிதழிலும் தடம் பதித்து பலர் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்த்த யுகம் நியூஸ் மனமார வாழ்த்துகிறது…..