இ.பி.எஸ். (EPS 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!
பாண்டிச்சேரி:இ.பி.எஸ். (EPS 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் பாண்டிச்சேரி பஞ்சவாடி அருகில் உள்ள R T S திருமண மஹாலில் R. தம்பு சாமி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் EPS-95 அகில இந்திய ஓய்வூதியர் நல சங்கத்தின் தலைவர் கே. கனகராஜ் அவர்கள் பென்சன் திட்டத்தை பற்றியும்,உச்ச நீதிமன்ற நிலவரங்களைப் பற்றியும், EPFO வின் நிலவரங்களைப் பற்றியும் ,தெளிவாக, விரிவாக ,
விளக்கி பேசினார் ,
மேலும் சங்கத்தின் பொதுச்செயலாளர், R. கிருஷ்ணமூர்த்தி, துணை பொதுச் செயலாளர் S. பரமசிவம், துணைத்தலைவர், M.K. பாஸ்கரன், சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் ,G. வெங்கடேசன் ,T. ஐவர்ராஜ் ,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெருவாரியாக ஆரோ புட் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

R.தம்புசாமி தலைவராகவும், சாந்தீபன் செயலாளராகவும் , T. குமார் பொருளாளராகவும், திருமதி சசிரேகா துணைத் தலைவராகவும், குப்புசாமி துணை செயலாளராகவும், பெருமாள் சாமி ஆலோசகராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இறுதியாக புதிய உறுப்பினர்களை சேர்த்து சங்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
