அன்பின் பாதை அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு பேரணி
சென்னை: அன்பின் பாதை அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு பேரணி சென்னையில் நடைப்பெற்றது.

மே 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை டூமிங் குப்பம், நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் மீனவ பகுதி பள்ளி சிறுவர் சிறுமிகளுக்கு கோடைக்கால விடுமுறை முகாம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வினை கடந்த மே மாதம் 1 ஆம் தேதி அன்று மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை தா. வேலு அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து ஒன்பது நாட்கள் மாணவர்களுக்கு வெவ்வேறு விதமான செயல்பாடுகள், நடனம், ஓவியம், வரைதல் மற்றும் பல விழிப்புணர்வு பற்றிய சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது.
8ஆம் தேதி குட் டச் மற்றும் பேட் டச் பற்றிய வகுப்புகளும், அதற்கான செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு ஒன்பதாம் நாள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி சென்னை கலங்கரை விளக்கம் முதல் டுமிங் குப்பம் சாலை வரை நடைபெற்றது.
இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கையில் பதாகைகள் ஏந்தி கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அன்பின் பாதை அறக்கட்டளை நிர்வாகிகள், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர்கள் மற்றும் 125 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரேவதி மற்றும் மயிலாப்பூர் கிழக்கு பகுதி செயலாளர் முரளி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
