ராகுல் காந்தி அவர்களின் எம். பி பதவியை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸார் சத்தியாகிரக அறவழிப்போராட்டம்!

சென்னை: மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் எம். பி பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சத்தியாகிரக அறவழிப்போராட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவரும், எஸ்.சி.பிரிவு மாநில தலைவருமான எம். பி. ரஞ்சன்குமார் அவர்கள் தலைமையில்
அரும்பாக்கம் அண்ணா வளைவு அருகில் நடைபெற்றது .

இந்த அறவழிப்போராட்டத்தில் மக்களவை உறுப்பினர்களான செல்லகுமார், திருநாவுக்கரசு, விஜய் வசந்த் ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் தமிழ்செல்வன்,முன்னாள் மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம், கலைப் பிரிவு மாநில செயலாளர் சூளை ராஜேந்திரன், மாவட்ட தலைவர் சந்திரசேகர், மாவட்ட பொறுப்பாளர் ரஞ்சித்குமார்,பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் உமா பாலன்,எஸ்.சி.பிரிவு மாநில துணைத்தலைவர் வின்சென்ட்,
மத்திய சென்னை எஸ். சி. பிரிவு மாவட்ட தலைவர்களான ரஞ்சித் மற்றும் ராஜலட்சுமி, வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ராஜேஷ்,மாவட்ட துணைத்தலைவர் டி.எல்.வி தனலட்சுமி,மாநில செயலாளர் சுமதி ஏழுமலை வட்டத் தலைவர்கள் செல்வம்,குபேந்திரன்,மன்மதன், ஜாபர்,மாநில செயலாளர் அனுஷா ராமன், எஸ். சி. பிரிவு எழும்பூர் தொகுதி தலைவர் பிரவீன்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் திறளாக கலந்து கொண்டனர்.