அகில இந்திய உணவு போட்டியில் (Master Chef) முதல்முறையாக வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த சமையல் கலைஞர் அருணா விஜய் அவர்களுக்கு பிரமாண்ட பாராட்டு விழா!

சென்னை:
தமிழ்நாட்டில் முதல் முறையாக அகில இந்திய உணவு போட்டியில் பங்கேற்று நான்காம் இடம் பெற்றுள்ள பெண்மணி அருணா விஜய்க்கு பாராட்டு விழா சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் , சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், முன்னாள் காவல்துறை டிஜிபி ரவி உள்பட பல சமையல் கலைஞர்கள், நண்பர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

மாஸ்டர் செஃப்(Master Chef) என்கிற அகில இந்திய உணவு போட்டி இந்தியாவில் மிக பிரபலமானது இதில் வித்தியாசமான உணவுகள் , புதுமையான உணவுகளை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி ஆகும்.

இந்நிகழ்ச்சியில் தமிழகத்தை சார்ந்த யாரும் இதற்கு முன் பங்கேற்றதில்லை, ஆனால் இம்முறை தமிழகத்தை சார்ந்த தமிழகத்தில் வளர்ந்த மார்வாடி சமுதாயத்தை சேர்ந்த பெண் அருணா விஜய் அவர்கள் பங்கேற்று தென்னிந்திய உணவுகளை செய்து நடுவர்களை ஆச்சரியப்படுத்தினார்.

இவ்வகையான உணவுகளை நடுவர்கள் பார்த்திருக்க முடியாத வகையிலான தென்னிந்திய உணவுகளை பறைசாற்றினார்.

மக்களின் ஆதரவும் தென்னிந்திய உணவின் மீது அவர் வைத்திருந்த அதீத பற்றினால் அந்த நிகழ்ச்சியின் ஃபைனல் லிஸ்டில் இடம் பெற்றார்.

அந்த மாஸ்டர் செஃப் அகில இந்திய உணவு போட்டியில் நடுவர்கள் இவரிடம் நீங்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என கேட்டதற்கு நான் தமிழகத்திலிருந்து வருகிறேன் ஆனால் நான் வட இந்திய மார்வாடி சமூகத்தை சார்ந்த பெண்மணி ஆனால் தமிழகத்தில் தான் நான் படித்தேன், வளர்ந்தேன் தமிழ்நாடு தான் என் மாநிலம் என பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதைக் கண்டு ஆச்சரியமடைந்த நடுவர்கள் அப்படியா என்று கேட்டவுடன் “வந்தாரை வாழவைக்கும் என் நாடு தமிழ்நாடு என தென்னிந்திய நிகழ்ச்சியில் தமிழில் அவர் தமிழ்நாடு மீது வைத்திருக்கும் பற்றை வெளிப்படுத்தினார்.

அதுமட்டுமின்றி அவர் தென்னிந்திய உணவுகளை செய்து காட்டி நடுவர்களை அசத்தினார், அதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் நான்காம் இடம் வந்தது மட்டுமில்லாமல் அகில இந்திய உணவு போட்டியில் பங்கேற்ற முதல் தமிழக பெண்மணி என பெயரையும் வாங்கியுள்ளார்.

மேலும் சமையல் கலைஞர் அருணா விஜய் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
தென்னிந்திய உணவுகளை அகில இந்திய உணவுப் போட்டியில் செய்து காட்டியதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தென்னிந்திய உணவுகள் ஏராளமான வகைகள் உள்ளது நமக்குத் தெரிந்ததை விட அதிக உணவு வகைகள் உள்ளது அனைவரும் அதை தெரிந்து கொள்ள வேண்டும்.

வருகிற காலங்களில் தமிழகத்தை சார்ந்த உணவு கலைஞர்கள் அகில இந்திய போட்டிகளில் பங்கேற்க வேண்டும், முதலில் நம் மீது தன்னம்பிக்கை நாம் வைத்திட வேண்டும் என்னென்ன வகையான உணவுகள் தென்னிந்தியாவில் உள்ளது என தெரிந்து கொள்ள வேண்டும் , வருங்காலங்களில் அகில இந்திய உணவு போட்டிகளில் உறுதியாக தென்னிந்திய உணவுகள் அதிக அளவில் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்தார்.