இபிஎஸ் 95 அகில இந்திய ஓய்வூதிய நல மத்திய சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர் களின் ஓய்வூதியத்தை உயர்த்த கோரி மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கோரிக்கை கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம்!

கொளத்தூர்:இபிஎஸ் 95 அகில இந்திய ஓய்வூதிய நல மத்திய சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர் களின் ஓய்வூதியத்தை உயர்த்த கோரி கொளத்தூர் அண்ணாசிலை பேருந்து நிறுத்தம் அருகில்,இபிஎஸ் 95 அகில இந்திய ஓய்வூதிய நலச்சங்கத்தின் தலைவர் கே. கனகராஜ் அவர்கள் தலைமையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தியும்,பதாகைகளை கையில் பிடித்துக் கண்டன கோரிக்கை கோஷங்கள் ஏழுப்பி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நுகர் பொருள் வாணிப கழக ஒய்வூதியர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சோம சுந்தரம், நுகர் பொருள் வாணிப கழக பாட்டாளி ஓய்வூதியர் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். கே. மாறன், தமிழ்நாடு கனிம வள ஒய்வூதியர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட
மத்திய ,மாவட்ட நிர்வாகிகள்
மற்றும் உறுப்பினர்கள் திறளாக கலந்துக்கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டம் தாம்பரம் இபிஎப் அலுவலகம் முன்பும், கோடம்பாக்கம் லிபர்ட்டி பஸ் நிறுத்தம் அருகிலும், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் நடைப்பெற்றது.