பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜியின் 12வது பட்டமளிப்பு விழா நிகழ்வு!
சென்னை:பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜியின் 12வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 44 பிஎச்.டி., 501 முதுகலை மற்றும் 1795 இளங்கலை உள்பட மொத்தம் 2340 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர்.
தர வரிசையில் இடம் பெற்றதற்காக 51 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இதில் 33 மாணவர்கள் இளங்கலை மற்றும் 18 மாணவர்கள் முதுகலை படித்தவர்கள் ஆவர். தொற்றுநோய் பரவி வரும் நிலையில், தமிழக அரசு விதித்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகளின்படி இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கட்டுப்பாடுகளின் அடிப்படையில் 578 மாணவர்கள் மட்டும் நேரில் பட்டம் பெற்றனர். மேலும் 1762 மாணவர்கள் ஆன்லைனில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
டாக்டர். எம். ரவிச்சந்திரன், செயலாளர், புவி அறிவியல் அமைச்சகம் (எம்ஓஇஎஸ்), இந்திய அரசு, புது டெல்லி மூலம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்த பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி வேந்தர் திரு. பிஎஸ்ஏ ஆரிப் புஹாரி ரஹ்மான், இணை வேந்தர் திரு. அப்துல் காதர் ஏ ரஹ்மான் புஹாரி, துணைவேந்தர் டாக்டர் ஏ.பீர் முகமது, பதிவாளர் டாக்டர். என். ராஜா ஹுசைன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

டாக்டர். எம். ரவிச்சந்திரன், செயலாளர், புவி அறிவியல் அமைச்சகம் (MoES), இந்திய அரசு, புதுடெல்லி, தனது உரையில், பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பேசுகையில், “பெரும்பாலும் நாங்கள் தொழில்நுட்பத்தை பின்பற்றுபவர்கள். பல துறைகளில் தலைவர்கள் அல்ல. அடுத்த 25 ஆண்டுகளில் சுதந்திரத்தின் 100வது ஆண்டு, (அம்ரித் கல்) நாம் ஒரு கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத் தலைவராக, பாதையை கண்டுபிடிப்பவர்களாக இருக்க வேண்டும், பின்பற்றுபவர்களாக இருக்கக்கூடாது. இது நமது லட்சியமாகவும், கனவாகவும் இருக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் யோசனைகளை வெளிக்கொண்டுவர நீங்கள் அனைவரும் உங்கள் முழு ஆற்றலுடனும், அர்ப்பணிப்புடனும் பங்களித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். புதுமையால் மட்டுமே உற்பத்தித் திறனை உயர்த்த முடியும். அதன் மூலம் நாட்டின் ஜிடிபியும் உயரும்.”
வரவேற்பு உரை மற்றும் ஆண்டறிக்கையை வழங்கிய துணைவேந்தர் டாக்டர். ஏ.பீர் முகமது பேசுகையில், “2021-22 கல்வியாண்டு, நமது கிரகத்தின் நன்மைக்காக – மனிதனுக்கும் இயற்கைக்கும் – கல்வி மற்றும் அறிவை பயன்படுத்துவதற்கான புதிய வழிகளை ஆராய்வதற்கும், புதுமையான திட்டங்கள் மூலம் கல்வி நிறுவனங்கள், அதன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொண்ட ஒரு வெற்றிகரமான ஆண்டாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நாம் அடையும் முன்னேற்றம், நமது இலக்குகளை மறுபரிசீலனை செய்வதற்கும், வரம்பை உயர்த்துவதற்கும் நம்மை தூண்டுகிறது. இதனால் நாங்கள் மிக விரைவில் முதல் பத்து தரவரிசையில் நுழைவோம்’’.
தேசிய கீதத்தை தொடர்ந்து வெற்றி பெற்ற பட்டதாரிகளால் உறுதிமொழி எடுக்கப்பட்ட பிறகு பட்டமளிப்பு விழா நிறைவடைந்தது.
