சென்னை புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்தின் 500 வது ஆண்டு அதிகார பூர்வ துவக்க விழா நிகழ்வு (1523-2023)

சென்னை: புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்தின் 500 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் இந்தியா மற்றும் நேபாளம் தூதுவரான மேதகு லியோபோல்டோ கிரெல்லி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து அதிகார பூர்வமாக நிகழ்வுகளை துவக்கி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்வில் அவருக்கு மிக சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. சிறப்பு ஆராதனை திருப்பலியும் நடைபெற்றது . முன்னதாக புனித பத்ரீசியார் ஆலயத்திற்கு வருகை புரிந்து பொது மக்களுக்கு ஆசீர் வழங்கினார்.

இப்பகுதி கிறிஸ்தவ மக்களால் கும்ப ஆரத்தி எடுத்து சிறப்பான முறையில் வரவேற்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் மேதகு .டாக்டர் நீதிநாதன் அவர்கள் முன்னிலையில் சிறப்பான முறையில் நடைப்பெற்றது.

மேலும் இந்த துவக்க விழா நிகழ்வுகளை மறை மாவட்ட முதன்மை மத குரு டாக்டர் அருட்திரு.ஜான் போஸ்கோ, மறைவட்ட முதன்மை மத குரு அருட்திரு. லூயிஸ் ராயர், புனித பத்திரிசியார் ஆலய பங்குத்தந்தை அருட்திரு.ஷைலாக் ஸ்டீபன் மற்றும் புனித தோமையார் மலை தேசிய திருத்தல அதிபர் அருட்திரு ஏ.டி.மைக்கேல் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் துறவர சபையை சார்ந்த ஏராளமான குருக்கள், கன்னியர்கள் உள்பட 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.