சோழிங்கநல்லூர்:
லார்ட்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் சென்னை சோழிங்கநல்லூர் கிளப் கிளை சார்பில் சோழிங்கநல்லூர் பகுதியில் மர கன்றுகள் நடும் நிகழ்வு நடைப்பெற்றது.

மேலும் மாதம் முழுவதும் 100 மரக்கன்றுகள் வீதம் நடவேண்டும் என்று முடிவெடுத்து வருடத்தில் இரண்டு மாதங்கள் (ஏப்ரல். மே) தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் தொடர்ந்து மரக்கன்றுகள் நடுவதற்கு இன்று முதல் மரக்கன்றுகள் நடப்பட்டு துவங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
இவ்விழா லார்ட்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் தலைவர் லார்ட்ஸ் ம.பால்ராஜ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் இதில் சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
லார்ட்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் சென்னை சோழிங்கநல்லூர் கிளை தலைவர் லார்ட்ஸ் தக்ஷ்ணாமூர்த்தி மற்றும் சோழிங்கநல்லூர் கிளை லார்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் இணைந்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் இதுபோன்று அனைத்து ஊர்களிலும் உள்ள லார்ட்ஸ் கிளை கிளப்ஸ்களின் உறுப்பினர்கள் அனைவரும் இவ்வழியையே பின்தொடர வேண்டும் என்று பால்ராஜ் அவர்கள் பசுமையான பாரதம் படைப்போம்…பொது இடங்களில் மரங்களை விவசாயம் செய்வோம் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு:
Lords M.பால்ராஜ்,
Founder | International President
LORDS CLUBS INTERNATIONAL
Govt. Reg. No. : 1359/2013
Website: www.lordsclubs.com
E-mail: lordsclubsinternational@gmail.com
Mobile: + 91 98405 59673 / + 91 97908 55633