சென்னை:
இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அவர்களின் ஆணைக்கிணங்க எழும்பூர் சர்க்கிள்-1ல் 77-வது வட்டம் சார்பில் ராகுல் காந்தி அவர்களின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு 77-வது வட்ட மாமன்ற உறுப்பினர் சுமதி புத்தநேசன் மற்றும் புத்தநேசன்.ஆகியோர் முன்னிலையில் எழும்பூர் சர்க்கிள் தலைவர் எம். டி சூரியா அவர்கள் தலைமையில் எக்விடாஷ் நடத்திய பொது மருத்துவம், கண்புரை சிகிச்சை, பல் மருத்துவ முகாம் 77-வது வட்ட கவுன்சிலர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.


77-(அ)வது வட்ட தலைவர் டி. ஏ. செல்வம் அவர்கள் நிகச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.


இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கலைப்பிரிவு மாவட்ட பொதுசெயலாளர் புல்லட் கே.வி. கோபிநாத், 77-வதுவட்ட தலைவர் குபேந்திரன், மாவட்ட, துணைதலைவர் ஜே. டில்லிபாபு, மாவட்ட பொதுசெயலாளர் சுமதி ஏழுமலை ,சர்க்கிள் துணைதலைவர் கே. ஜி. அசோகன்., வட்ட துணைத்தலைவர் ஹூதர், சென்னை ஜெயகுமார், வாணி ,ஞானேஷ் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



