நாமக்கல்:
புதுச்சத்திரம், பாச்சல், பாவை கல்லூரி மற்றும் பள்ளிக்கூடம் அருகே அரசு மதுக்கடையையே மிஞ்சும் அளவிற்கு தாபாக்கள், சந்து கடைகளில் மது விற்பனை புதுச்சத்திரம் ஒன்றியத்தில் தமிழக வெற்றிக்கழக ஒன்றிய செயலாளர் ராகவன் ஆதரவோடும், அவரது சொந்த நிலத்தில் தாபா மற்றும் 24 மணி நேர சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டு வருகிறார் என்பதை தமிழ்ப்புலிகள் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

அதோடு தமிழாநாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அமோகமாக விற்கப்படும் புதுச்சத்திரம் ஒன்றியத்தில் தடுத்து நிறுத்த வேண்டியும், விற்கக்கூடிய சமூக விரோதிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டி தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் குமரவேல் அவர்களின் சார்பாக புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் புதுச்சத்திரம் காவல் துறையையும், மதுவிலக்கு காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் மிக வன்மையாக தமிழ்ப்புலிகள் கட்சி கண்டிக்கிறது.

அதுமட்டுமில்லாமல் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியங்களில் டெண்டர் முறைகேடு மற்றும் பல்வேறு திட்டப் பணிகளில் பல லட்சம் நிதி மோசடி, நிதி இழப்பு மற்றும் தெரு விளக்குகள் இரு மடங்கு விலை கொடுத்து வாங்கி ஊழல் செய்த அதிகாரிகளையும், உடந்தையாய் சென்ற ஆளுங்கட்சி பிரதிநிதிகள் மீது கூறிய சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ்ப்புலிகள் கட்சி நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

