குரோம்பேட்டை:
சென்னை படூரை சேர்ந்த ஜோசப் மற்றும் ரூத் ஆகியோரின் மகன்கள் 10 வயதுடைய அபிஷேக் இம்மானுவேல் மற்றும் 8 வயதுடைய கெவின் எபிநேசர் ஆகியோர் இந்துஸ்தான் இன்டர்நேஷனல் பள்ளியில் பயின்று வருகின்றனர்.இளம் வயதிலேயே நினைவாற்றல் மிக்கவர்கள் இவர்கள் இருவரும் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் (விவிலியம்)இடம் பெற்றுள்ள சங்கீதம் 150 அதிகாரத்தை உள்ளடக்கியதாகும்.
இதில் 2461 வசனங்கள் உள்ளடக்கியதாகும் . இதனை இருவரும் 2 மணி நேரம் 16 நிமிடங்களில் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த இரண்டு சிறுவர்களும் ஏற்கனவே பல்வேறு உலக சாதனை அமைப்புகளின் அங்கீகாரம் பெற்றவர்கள்.
மேலும் இந்த நிகழ்வில் லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல் மறு ஆய்வு செய்து இவர்களின் சாதனையை உலக சாதனையாக அறிவித்தார்.
இந்த நிகழ்வில் போதகர் கிருபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
மேலும் இந்த நிகழ்வில் தலைமை செயல் அதிகாரி கார்த்திக் குமார் பதக்கம் அணிவித்தார். நிர்வாக இயக்குனர் டாக்டர்.மோனிகா ரோஷினி வாழ்த்துரை வழங்கினார். முனைவர் சரஸ்வதி ஜோசப் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்வினை ஹரிஹரன் மற்றும் குழுவினர் ஒருங்கிணைத்தனர் . இந்த நிகழ்வு பார்வையாளர்களை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.



