அய்யப்பன்தாங்கல் :
சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் சுப்பையா நகர் விரிவாக்கம், பிள்ளையார் மடந்தாங்கல் சாலை, பிரெஸ்டிஜ் பெல்லா விஸ்டா அருகில் “மெடால் டயாக்னாஸ்டிக்ஸ் ஆய்வக பரிசோதனை மையத்தின் புதிய தனிகிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இந்த கிளை திறப்பு விழாவில், மருத்துவர்.பி.ஏ. அபிநயா வல்லபன், .
மருத்துவர் எம்.ரக்சனா, ஐஸ்வர்யா பில்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.சந்திரமோகன், சேலம் ஜி.எஸ்.கான்கிரீட் எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.இளங்கோ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு திறப்பு சிறப்பித்தனர்.

இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் அய்யப்பன்தாங்கல் மெடால் டயாக்னாஸ்டிக்ஸ் ஆய்வக பரிசோதனை மைய த்தின் தனி உரிமைகிளை(பிராஞ்சைஸி)யின் உரிமையாளர் மருத்துவர். சக்திவேல் வரவேற்று உபசரித்தார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த பரிசோதனை மையத்தில் இரத்த பரிசோதனை , மலப் பரிசோதனை . சிறுநீர் பரிசோதனை, திசு ஆய்வு பரிசோதனை மற்றும் புற்று நோய் அறிகுறி பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் சிறப்பாக செய்யப்பட்டு வருவதாகவும் , மேலும் சர்க்கரை பரிசோதனை முற்றிலும் இலவசமாக செய்யப்படுவதாகவும். மற்ற பரிசோதனைகளுக்கு நவம்பர் 30 வரை 10 சதவீதம் அறிமுகசலுகை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு:
மருத்துவர்.சக்திவேல் அலைபேசி :93811 70807