மலேசியா தினத்தை முன்னிட்டு தமிழர்களின் பெருமையை பறை சாற்றும் விதமாக 159 இசை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கொண்டு 6 மணி நேரம்,40 நிமிடங்கள் தொடர்ச்சியாக நேரலையில் இசை நிகழ்ச்சி லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்

64 வது மலேசிய தினத்தை முன்னிட்டு மலேசியாவில் உள்ள ஜெய் ஆன்லைன் மியூசிக் நிறுவனம் 14 மாநிலங்களை சேர்ந்த தனது 159 இசை பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டு 6 மணிநேரம், 40 நிமிடங்கள் தொடர்ந்து இசை மராத்தான் நிகழ்ச்சி மற்றும் 14 மாநிலங்களின் சிறப்புகள் பற்றி பேசி லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் மலேசியா இசை அமைப்பாளர் விஜயநாதன் தஹரசன் என்கிற ஜெய் , ஜெய் ஆன்லைன் மியூசிக்கின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் இடம் பிடித்தனர்..

மலேசியா மாநிலம் கோலாலம்பூர் பகுதியில் ஜெய் ஆன்லைன் இசை அகாடமி மற்றும் ஆரஞ்சு பாக்ஸ் என்கிற அமைப்பும் இணைந்து இசையமைப்பாளார் ஜெய் என்கிற விஜயநாதன் தஹரசன் தலைமையில் மலேசிய தினத்தை முன்னிட்டு உலகில் முதன் முறையாக 6 மணிநேரம் 40 நிமிடங்களில் 14 மாநிலங்களிலிருந்து 159 இசை பள்ளி மாணவ, மாணவிகள் இசை நிகழ்ச்சி நேரலை நடத்தி புதிய உலக சாதனை படைத்தனர்.
இந்த உலக சாதனை நிகழ்வில் 14 மாநில கலாச்சாரம், பண்பாடு, வளர்ச்சி, விவசாயம், தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் பங்களிப்பு சிறப்புகள் குறித்து 14 பிரதிநிதிகள் பேசி சாதனை படைத்தனர்.

இந்த நிகழ்ச்சியை ராக்ஸ்ஸ்டார் மீடியா குளோபல் நிறுவனர் முனைவர்.எம்.ராகவி பவனேஸ்வரி அவர்கள் நேரலை செய்தார். இந்த நிகழ்வில் லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் உலக சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி கெளரவப்படுத்தினார்.

தலைமை செயல் அதிகாரி கார்த்திக் குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.தலைமை நிர்வாக அதிகாரி செல்வம் உமா அவர்கள் ஆய்வுசெய்தார்கள்.

இந்த விழாவில் மலேசியா டத்தோ புருஷோத்தம்மன் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்வில் முதன்மை நிர்வாகிகளான ஸ்டீபன் சீனிவாசன், சாலமன் தினேஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பத்ம பிரியா அவர்கள் தலைமை உரை ஆற்றினார்.

இந்த நிகழ்வின் தொழில்நுட்ப ஒளிப்பரபினை சென்னையில் இருந்து ஹரிஹரன், இலக்கியா, சஞ்சய், மலேசியாவில் இருந்து லுகேன்ரா , ஜோஸ்வா , பிரகாஷ் , குகாஸ்ரீ , பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.