சென்னை : மறைந்த ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் அம்மையாரின் 64-வது பிறந்த நாளை நினைவு கூறும் விதமாகவும் ,அவரின் நினைவுகளை போற்றும் விதமாகவும் ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் தினம் (JB DAY) கொண்டாட்டம் நிகழ்வு ஈ.சி.ஆர், தனியார் விடுதியில் ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் நிறுவனத்தலைவர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த விழா தொடக்க நிகழ்வில் குத்துவிளக்கு ஏற்றி விழா தொடங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் நிறுவனரும், மனித நேயருமான சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் புதல்வியின் அசத்தல் நடனம் அனைவரையும் கவர்ந்தது.
பிறகு அறக்கட்டளையின் நிர்வாகிகளான மாதேஷ்வரன், ரவிக்குமார், துரைராஜ், ஹரி, அஜய், தினேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்..

சென்னை பெரம்பூரை சேர்ந்த ராகவா லாரன்ஸ் அவர்களின் மாணவரான தான்சேன் அவர்களின் மெய்சிலிர்க்க வைத்த இசை அணைவரையும் நெகிழ வைத்தது..

மேலும் ஜே.பி.நிறுவன நிர்வாகிகளான சுதா சுகுமார் பாலகிருஷ்ணன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் இணைந்து ஜே.பி.நிறுவன நிதி நிறுவன லோகோவை வெளியிட்டனர்…

ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் நிறுவனரான சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் விழாவில பேசியதாவது: தான் ஒலைக் குடிசையில் பிறந்து எனது கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்து எனது அம்மாவின் ஆசிர்வாதத்தால் பல்வேறு உதவிகளை (கல்வி உதவி, மருத்துவ உதவி, ஏழை, எளியோருக்கு உணவு வழங்குதல். வீட்டற்றோருக்கு வீடு கட்டி கொடுத்தது) கடந்த 10 வருடத்திற்கும் மேலாக சிறப்பாக எவரிடமும் எந்த ஒரு உதவியும் பெறாமல் எனது சொந்த முயற்சியிலும், சொந்த செலவிலும் செய்து வருவதாகவும். எங்களது நிறுவனம் தற்போது 55 ஊழியர்களை கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது… இந்த ஆண்டு முடிவிற்குள் 500 தகுதியான நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வாய்ப்பு வழங்குவேன் என்று உறுதியுடனும், பெருமிதத்துடனும் தெரிவித்தார்.

மேலும் இந்த குடும்ப விழாவில் கலந்துக் கொண்ட நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது..

மேலும் இந்த நிகழ்வில் தமிழக வாகன ஒட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்..

இறுதியாக ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் பிறந்த நாளை நினைவு கூறும விதமாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது..