இராமேஸ்வரம்:
கொரோனா விழிப்புணர்வுக்காக
கோவையைச் சேர்ந்த ஆஷ்ரம் பள்ளி ஸ்கேட்டிங் மாணவர்கள்
கே.ஆர்.முரளிதரன்(வயது 12), இ.தனுஷ் ( வயது 14) இருவரும் இணைந்து உலக சாதனை முயற்சி படைக்கும் நிகழ்வு ஆஷ்ரம் பள்ளி நிர்வாக இயக்குனர் அரிமா.முனைவர் உதயேந்திரம் அவர்கள் தலைமையிலும், எம்.கே. ஸ்கேட்டிங் வழிகாட்டுதலின் பேரிலும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கடந்த ஜனவரி மாதம் 09/01/2021 அன்று ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை எல்லை வரை 38 கிலோ மீட்டர் தூரத்தை 1.30 மணி நேரத்தில் professional – inline skating மூலம் ராமேஸ்வரம் தீவை கடந்த முதல் இந்தியர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் இந்த இரு பள்ளி மாணவர்கள்.. இந்த உலக சாதனை முயற்சி சென்னையைச் சேர்ந்த லிங்கன் உலக சாதனை புத்தக நிறுவனத்தில் (LINCOLN BOOK OF RECORDS) உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் உலக சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினார். தலைமை செயல் அதிகாரி கார்த்திக் குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் நிறுவன முதன்மை நீர்வாகிகளான ஸ்டீபன் சீனிவாசன், சாலமன் தினேஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பத்ம பிரியா தலைமை உரை ஆற்றினார்.

இந்த நிகழ்வினை ஹரிஹரன், இலக்கியா, சஞ்சய், உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இந்த உலக சாதனை நிகழ்வை ஐஸ்வர்யா ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கினர்.இந்த உலக சாதனை நிகழ்த்திய மாணவர்களை பொதுமக்கள் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
