சூளை: சென்னை: சூளை காட்டூர் நல்ல முத்து ஆச்சாரி தெருவில் 77வது வட்ட இந்து முன்னணி சார்பில் 3 அடி சிவசக்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இவ்விழாவிற்கு 77வது வட்ட இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் பி.என். சீனிவாசன் விழாவிற்கு தலைமை தாங்கினார். வட்ட தலைவர் சந்திரபாபு முன்னிலை வகித்தார்.

மேலும் இவ்விழாவில் அப்பகுதியில் வசிக்கும் 100 ஏழை, எளிய மற்றும் பொதுமக்களுக்கு பெட்ஷீட், 100 பெண்களுக்கு பெரிய சில்வர் தட்டுடன் மாங்கல்யம் கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல், ஜாக்கெட் துணி என தாம்பூலம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏழைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் இந்து முன்னணி மாநகர பொதுச்செயலாளர் மேகநாதன், துணைத் தலைவர் முருகேசன், செயலாளர் சிவ விஜயன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் தங்கராஜ், எழும்பூர் தொகுதி தலைவர் வெங்கடேஷ், பொதுச் செயலாளர் கார்த்தி ஆகியோர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.