சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 49வது ஆண்டு பெரு விழா ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்: அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருட்திரு வின்சென்ட் சின்னதுரை அறிவிப்பு
பெசன்ட் நகர் :
கொடி ஏற்றும் நாள் மற்றும் கடைசி இரண்டு நாள் மொத்தம் மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் திருத்தலத்துக்கு அனுமதி இல்லை மற்ற நாட்களில் குறைந்த அளவில் பொதுமக்களுக்கு அனுமதி உண்டு.
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பங்குத்தந்தை வின்செண்ட் சின்னதுரை அவர்கள் தெரிவித்த தாவது:
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 49-வது ஆண்டு பெரு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 29தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி வரை அன்னையின் பிறப்பு பெருவிழா அன்று நிறைவு என தெரிவித்தார்..
கொரோனா தொற்று பேரிடர் காரணமாக மக்கள் பங்கேற்பு இல்லாத கொடியேற்ற திருநாள் நிகழ்வாக இந்த வருடம் கொண்டாடப்படும் எனவும்,
நடைபயணமாக பக்தர்கள் யாரும் ஆலயத்திற்கு வரவேண்டாம் எனவும், கொடியேற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் , பக்தர்கள் பங்கேற்க முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.
மேலும் செப்டம்பர் 7ம் தேதி தேர் பவனி மற்றும் செப்டம்பர் 8 கொடி இறக்கம் நிகழ்ச்சிக்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வர வேண்டாம் எனவும் , மற்ற நாட்களில் திருத்தலத்திற்கு வரலாம் எனவும் பங்கு தந்தை வின்சென்ட் சின்னதுரை தெரிவித்தார்..
மேலும் அன்னையின் கொடியேற்ற நிகழ்ச்சியை
தொலைகாட்சி மற்றும் யூ.டியூப் , முகநூல்பக்கத்தில் கொடியேற்ற நிகழ்வை நேரலையாக பார்த்து அன்னையின் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அருட்தந்தை வின்செண்ட் சின்னதுரை கூறினார்…
(www.vailankannishrinechennai. in)
