மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக பிரத்தியேகமாக 11 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடத்திய சாய் இண்ஸ்டியூஷன் கல்வி நிறுவனம்

ஆர்.எ.புரம் :
சாய் இண்ஸ்டியூஷன் கல்விநிறுவனம் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர் களுக்காக பிரத்தியேகமாக நடத்தும் 11 வது வருடாந்த பட்டமளிப்பு விழா ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள முத்தமிழ் பேரவை மன்றத்தில் குத்து விளக்கு ஏற்றி விழா தொடங்கப்பட்டது…

இந்நிகழ்வில் பிரபல பேஷன் டிசைனரும். சாய் இண்ஸ்டியூசன் பேஷன் துறையின் ஆலோசகருமான சிட்னி ஸ்லாடன், நடிகர் ஜான் விஜய், நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார், செஃப் சீத்தாராம் பிரசாத், செஃப் கண்ணன், செஃப் ஸ்ரீ பெரிய கருப்பன், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.

மேலும் இந்தியாவில் முதன் முறையாக சாய் இன்ஸ்டிடியூஷன் கல்வி நிறுவனம் 7.5 லட்சம் மதிப்புள்ள 6 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச ஒரு வருட டிப்ளமோ இன் புட் புரொடக்சன் படிப்பை வழங்கியுள்ளது. இந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் தற்போது சென்னை வேளச்சேரியில் சொந்தமாக உணவகம் நடத்தி வருகின்றனர்.

மேலும் இநத பட்டமளிப்பு விழாவில் சாய் இண்ஸ்டியூஷன் மாணவர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் டிகிரி/டிப்ளமோ விஷுவல் கம்யூனிகேஷன், பேஷன் டிசைனிங் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் பேக்கரி படிப்புக்கான சான்றிதழ்களை பெற்றனர்.

சாய் கல்வி நிறுவனத்தை சேர்ந்த 11 ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் கத்தார் ஸ்டார் கேட்டரிங் சர்வீசஸ்சின் இன்டர்நேஷனல் இன்டர்ன்ஷிப்க்கு தேர்வாகியுள்ளனர்.

இந் நிகழ்விற்கான ஏற்பாடுகளை
சாய் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்
நிர்வாக இயக்குனர்
வினோத் குமார் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்….