பனை தொழிலின் அவசியத்தை வலியுறுத்தி உலகின் முதன் முயற்சியாக பனையோலையில் இந்திய தேசிய கொடியினை உருவாக்கிய இளம்பெண் தமிழ் கொடி: உலக சாதனையாக அங்கீகரித்த லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் https://www.facebook.com/Lincoln-Book-Of-Records-103311415155684/?ti=as

சொரன்சேரி :

நமது பாரத திருநாட்டில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகின் முதல் முயற்சியாக நலிவடைந்து வரும் பனை மற்றும் பனை தொழிலின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பனை ஓலையில் ஆன இந்திய தேசிய கொடியினை உருவாக்கம் செய்யும் நிகழ்வு சொரன்சசேரி என்ற பகுதியில் நடைப்பெற்றது….

மேலும் இந்நிகழ்வில் நெமிலி சேரியை சேர்ந்த இளம் பெண் கே.தமிழ் கொடி என்பவர் 2 அடி உயரமும்.3 அடி அகலமும் கொண்ட பனையோலையால் ஆன இந்திய தேசிய கொடியை தயாரித்து உலக சாதனை முயற்சி படைத்து ,லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்கிற உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.

இந்த உலக சாதனையை அமைப்பின் தலைவர் முனைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தமிழ் கொடியில் சாதனையை உலகறிய செய்யும் நோக்கில் அங்கிகரித்து சான்றிதழ் வாழங்கினார். இந்த நிகழ்வில் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி கார்த்திக் குமார் அடையாள அட்டை வழங்கி கவுரவித்தார். தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் செல்வம் உமா அவர்கள் உலக சாதனையை ஆய்வு செய்தார்.

காலை 8:10 மணி அளவில் துவங்கபட்ட இந்த உலக சாதனை முயற்சி சுமார் 6 மணி நேரம் வரை நீடித்தது. தமிழ் கொடி இந்த உலக சாதனையை நிகழ்த உறுதுணையாக இருந்த பூந்தமல்லி பார்ம் அசோசியேஷன் அமைப்பிற்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கபட்டது.

இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற காவல் துறை தலைமை அதிகாரி பாலசந்திரன், சுதேசி இயக்க தலைவர் குமரி நம்பி, வழக்கறிஞர் மோசஸ், லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிர்வாகிகளான ஸ்டீபன் சீனிவாசன் சாலமன் தினேஷ், ஹரிஹரன், இலக்கியா, சஞ்சய் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துக்கொண்டனர்….