பெரும்பாக்கம் : தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள கொரோனா நோயாளிகளின் உயிர் வாழ்வதற்கான சங்கிலி போராட்டத்தில் பிராண வாயுவின் முக்கிய தேவையை கருத்தில் கொண்டு ஆக்சன் எய்டு அசோசியேசன் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்வு பெரும்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மண்டலம் -1 பகுதியில் நடைப்பெற்றது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் லோக் சபா பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், சோழிங்க நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநர் கோவிந்த ராவ் ஐ.ஏ.எஸ் ஆகியோர் முன்னிலையில் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆக்சன் எய்டு அசோசியேசன் இணை இயக்குநர் எஸ்தர் மரிய செல்வம் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.

மேலும் இந்நிகழ்வில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், ஆக்சன் எய்டு அசோசியேசன் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.