தி.நகர்: ஐந்தருவி மகளிர் நலச்சங்கத்தின் சார்பில் தன்னார்வலர்கள் ஆலோசனை கூட்டம் இதன் நிறுவனர் சாந்தி அவர்களின் தலைமையில் சென்னை பாண்டி பஜார் பகுதியில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முழுவதும் உள்ள அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் மருத்துவமனை டீன், நிலைய மருந்துவ அலுவலர்களுடன் இணைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருவது,மேலும் எநத மாதிரியான சேவைகளை செய்யலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் கொரோனா நோயாளிகளின் உறவினர்களுக்கும் நோய் பரவுவதை தடுக்கும் விதமாக உள் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பது, கொரோனா நோயாளிகளே இல்லை என்ற நிலையை மாற்ற வேண்டும் என்பதே எங்களின் தன்னார்வலர்கள் நோக்கமாக இருக்கிறது என்று இந்த சங்கத்தின் தலைவர் சாந்தி அவர்கள் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து சேவையில் ஈடுபடும் தன்னார்வலர்கள் அவர்களது கருத்துகளை தெரிவித்தனர்.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நல்லோர் வட்டம் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் எக்ஸ்னோரா சேர்மன் பாரி ஆகியோர் கலந்துக் கொண்டு தன்னார்வலர்களிடையே மேலும் பல கருத்துகளை பகிர்ந்துக் கொண்டனர்..


