ராயபுரம் : கொரோனா பெருந்தொற்று ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் வேளையில் திமுக சார்பில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வட சென்னை இராயபுரம் கிழக்கு பகுதி திமுக 49வது வார்டுக்குட்பட்ட தாண்டவராயன் தெரு, பாலு தெரு ஆகிய பகுதிகளில் கொரோனா பேரிடர் கால நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 49 வது வார்டு திமுக நிர்வாகி சந்திர பொம்மு அவர்கள் ஏற்பாட்டில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சிறப்பாக நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறைய அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஒட்டுநர்களுக்கு நிவாரண பொருட்களாக அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வட சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் தா.இளையஅருணா,
ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் ஆர்.மூர்த்தி,
ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் ஆகியோர் இணைந்தும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.



