கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மூலம் நாடு முழுவதும் இலவச படுக்கை வசதிகள், உணவு, ஆக்சிஜன் உள்ளிட்ட அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகிறது. இவர்களுடன் பரக்கத் மேன்சன் குடும்பமும் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பரக்கத் மேன்சனில் உள்ள அனைத்து ரூம்களையும் இலவசமாக கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இங்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சையும், உணவும் வழங்கப்படும் என்று உரிமையாளர்
நசருல்லா பேட்டியளித்தார்.
இப்பேட்டியின் போது முகமது பர்க்கத் சுல்தான்,தாவுத் ரம்ஜான், அஸ்லாம்,இதயாத் அஃப்சின், யாசூல் கருணை, ஆகியோர் உடனிருந்தனர்.


