பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இலவச கோவிட் மீட்பு மையம் திறப்பு விழா சென்னை மன்னடியிலுள்ள பரக்கத் தங்கும் விடுதியில் நடைப்பெற்றது

சென்னை : கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதையொட்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் பல்வேறு கொரோனா நிவாரண பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள் மூலம் செய்து வருகின்றது .

கொரோனாவால் இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வது , ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருவது , ஏழைகளுக்கு இலவச உணவு வழங்குதல் , ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்குவது போன்ற பல்வேறு கொரோனா நிவாரணப் பணிகளை செய்து வருகிறது . இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் சென்னையில் இலவச கோவிட் மீட்பு மையம் மன்னடி பரக்கத் தங்கும் விடுதியில் துவங்கப்பட்டது .

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயற்குழு உறுப்பினர் முகமது ரபீக் ராஜா , பரக்கத் மேன்சன் உரிமையாளர் பரக்கத் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் முகமது சேக் அன்சாரி அவர்கள் இலவச கோவிட் மீட்பு மையத்தை திறந்துவைத்தார் . எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச .உமர் பாரூக் , எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தகர் அணியின் மாநிலத் தலைவர் M. முகைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .

பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் முகமது சேக் அன்சாரி அவர்கள் தனது உரையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையில் நமது நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தமிழகம் முழுவதும் மக்களுக்கான துயர் துடைப்பு பணிகளையும் , உதவி மையங்களையும் ஏற்படுத்தி அதன் மூலம் உதவிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . குறிப்பாக ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையின் அவசியத்தை கருத்தில் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது . நோயாளிகளுக்கு படுக்கையறை வசதிகளும் , தேவையுடையவர்களுக்கு ஆம்புலன்ஸ் சேவைகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது . மிக முக்கியமாக கொரோனா இரண்டாவது அலையில் இறந்தவர்களை அவரவர் மத வழிகாட்டுதல்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளது .

மேலும் சென்னை மக்களின் அவசிய சூழல் கருதி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் மருத்துவ வசதி மற்றும் படுக்கைகள் கொண்ட இலவச கோவிட் மீட்பு மையம் ‘ ( Free covid relief centre ) துவங்கப்பட்டுள்ளது .

எதிர்காலத்தில் தேவையின் அடிப்படையில் கோவிட் தொற்றுக்கு எதிரான எங்களது மீட்புப் பணிகளை விரிவுபடுத்த இருக்கிறோம் என்று தெரிவித்தார் .