ஊரடங்கால் பாதிக்கபட்டு தவித்து வரும் வீடற்ற சாலையோர எளியோர்க்கு தினமும் உதவிகரமாய் இருந்து வரும் கிறிஸ்தவ மதபோதகர் ஐசக் டேனியல்
சென்னை : தற்போது உலகமுழுவதும் கொரோனா தொற்று அதிவேக பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் அனைவரும் எதிர்கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு தரப்பு மக்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.
ஏன் பலர் மாண்டு கூட போயுள்ளனர். குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் வீடற்ற சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர் உண்ண உணவின்றி தவித்து வரும் வேளையில் பல்வேறு தன்னார்வலர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.
குரோம்பேட்டையில் உள்ள நியூ லைஃப் ஜெம்ஸ் என்ற அமைப்பின் சார்பில் கிறிஸ்தவ மத போதகரும், பெந்தேகொஸ்தே சபையின் ஒருங்கிணைப்பாளருமான ஐசக் டேனியல் என்பவர் நியூ லைஃப் ஜெம்ஸ் என்ற அமைப்பின் மூலம் குரோம்பேட்டை,உத்திரமேரூர், செங்கல்பட்டு, வட சென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடற்ற சாலையோர ஆதரவற்ற மக்கள் ,சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பலருக்கு தினமும் 500 உணவுகளை (பிரியாணி பொட்டலம்) குடிநீர், முக கவசம், தேவ வாக்கியங்கள் அடங்கிய கையேடு ஆகியவற்றை வழங்கி வருகிறார்…
மேலும் திருநங்கைகளுக்கு மளிகை பொருட்கள். அரிசி உள்ளிட்ட தொகுப்புகளையும், 4 கிராமங்களை தத்தெடுத்து தேவையான உதவி களை செய்து வருகிறார் .
அதோடு மட்டுமில்லாமல் சிறு தேவாலயங்களில் இருப்போருக்கு சிறு உதவிகளையும் செய்து வருகிறார்…
மேலும் இவர் அனைவரும் முக கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்
எஸ்.ஏ.ராஜ்குமார் – செய்தியாளர்











