ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி உயிரை மாய்த்து கொண்ட இளம் நடன கலைஞர் காமாட்சியின் 5 மாத ஆண் குழந்தைக்கு உதவிக்கரம் நீட்டிய தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம்
வடபழனி :
தென்னிந்திய நடன கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கொரோனா பரவல் ஊரடங்கால் வாழ்வாதரமின்றி தவித்து உயிரை மாய்த்துக் கொண்ட காமாட்சி மற்றும் சுரேஷ் தம்பதியன ரில் 5 மாத ஆண் குழந்தை கிரீத்திஸின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தாங்கள் வாழ்வாதார மின்றி தவித்து வரும் நிலையிலும் உதவி தொகை வழங்கும் நிகழ்வு இறந்த பெண்ணின் வடபழனியிலுள்ள அவரது வீட்டில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய நடன கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பாலாஜி அவர்கள் கனத்த இதயத்துடன் கூறுகையில்:நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவை அமலில் உள்ளது அதுபோல் திருமண மண்டபம், கோயில்கள் மெரினா கடற்கரை உள்ளிட்டவைகளுக்கு
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இந்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தியதால் கோயில்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளதாலும்,தங்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக ஆகிவிட்டதாகவும். மேடை நடனகலையை மட்டுமே நம்பி 3 லட்சத்திற்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் இருப்பதாகவும் அவர்களது குடும்பங்கள் பசியும் பட்டினியுமாக இருப்பதாகவும், சிலர் வாழ்வாதாரம் இழந்து தற்கொலை செய்யும் சூழ்நிலைக்கு (அவல நிலைக்கு) ஆளாக்கப்பட்டுள்ளதாகவும். தென்னிந்திய நடன கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பாலாஜி அவர்கள் பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து தங்கள் சங்கத்தில் உள்ள காமாட்சி என்பவர் தன் குழந்தைக்கு பால் வாங்கக்கூட காசு இல்லாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது கணவர் சுரேஷ் வறுமையில் வாடிய நிலையில் வாகன விபத்தில் இறந்துவிட்டதாகவும். தற்போது நிர்கதியாக அவருடைய 5 மாத கைக்குழந்தை தவிப்பதால் . அந்த குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் சங்கத்தின் நிர்வாகிகளிடம் வசூல் செய்த ரூபாய் 25000 த்தை அந்த குழந்தையை பராமரிக்கும் காமாட்சியின் தங்கையிடம் வழங்கியதாகவும் கூறினார்.
இதே போன்று தொடந்து ஊரடங்கு இருந்தால் இதுபோன்ற மரணங்கள் அதிகரிக்க கூடும் ஆகவே எங்களுக்கு உடனடியாக தமிழக அரசாங்கம் நல வாரியம் அமைத்து தரவேண்டும். அதுபோல் மேடை நடன கலைஞர்களுக்கு மாதம் ஒரு கனிசமான மானிய தொகையை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இவரை தொடர்ந்து பேசிய சக மேடை நடன கலைஞர்கள்.
முன்பு ஊரடங்கு போட்டதில் நாங்கள் பெரும்பாதிப்படைந்துள்ளோம். எங்கள் குழுவில் இருந்த காமாட்சி என்ற இளம் பெண் கடன் தொல்லையாலும். வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்ததாலும், தற்கொலை செய்து கொண்டதாகவும். அவரது கனவர் விபத்தில் இறந்துவிட்டதால் இந்த குடும்பத்திற்கு ஏதாவது அரசாங்கம் உதவி செய்யவேண்டும் என்று சக நடனகுழுவினர்கள் கண்ணீர் மல்க கூறினர். 5 மாத குழந்தை குழந்தைக்கு பால் வாங்கக்கூட காசு இல்லாமல் தற்கொலை செய்து கொண்டார் இதனால் இந்த குழந்தை அனாதையாகியுள்ளது,
இக்குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாங்கள் அனைவரும் இணைந்து நலத்திட்ட உதவியாக ரூபாய் 25000 ஆயிரம் வழங்கினோம். எங்களுக்கு ஒரு நலவாரியம் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிகழ்வில் மாநில தலைவர் பாலாஜி செயலாளர் முகுந்தன், பொருளாளர் மதன், துணை தலைவர் கண்ணன், துணைச்செயலாளர் பயர் குமார் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
