நுங்கம்பாக்கம் :

.பிஜே 360 நிறுவனத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நுங்கம்பாக்கத்தில் நடைப்பெற்றது.

பின்னர் பாலாஜி ஜெயராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது உள்ள கால சூழ்நிலையில் இளைஞர்கள் நன்றாக படித்தும், பட்டம் பெற்றும் அவர்களால் ஒரு முன்னணி நிறுவனத்திலோ, மற்ற நாடுகளுக்கு பணிக்கோ செல்வதற்கு அவர்களின் மன தைரியம் மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்ற காரணத்தினால் அவர்கள் முன்னேற்ற பாதைக்கு செல்வதற்கு பெரும் சிக்கலாக உள்ளது.

அதனை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும் என்பதே பிஜே360 நிறுவனத்தின் முக்கிய செயல்பாடு என்றும்,மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வியல் மாற்றத்தை நல்ல முறையிலும், தற்போது உள்ள கால சூழ்நிலைக்கு ஏற்றாற்ப்போல் செயல்படுத்த வேண்டும் என்பதே குறிக்கோள் என்று தெரிவித்தார்…

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது பிஜே 360 நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் அரிகிருஷ்ணன் மற்றும் பிரகாஷ் கலந்துகொண்டனர்.