சேப்பாக்கம் : டிச,21
வீரபோயர் இளைஞர் பேரவை மற்றும் வீரபோயர் சங்கம் சார்பில் போயர்களின் உரிமைகள் பறிபோவதை கண்டித்துபெருந்திறள் ஆர்ப்பாட்டம் சென்னை,
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வீரபோயர் இளைஞர் பேரவை மற்றும் மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிறுவனத் தலைவர் பி.ஆர்.சிவசாமி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு போயர் – ஒட்டர் இன சமூதாய மக்களுக்கு தனி ஒதுக்கீடு அளிக்க வேண்டும், போயர் – ஒட்டர் இன சமுதாயத்திற்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், கட்டுமான தொழிவாளர் நல வாரியத் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவி கொடுக்க வேண்டும் ,போயர் – ஒட்டர் இன மக்களை சீர்மரபு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து ஒரே சான்றிதழ் வழங்க வேண்டும், கல்லுடைக்கும் தொழிலை குலத் தெய்வமாக கொண்ட போயர் – ஒட்டர் இன மக்களுக்கு பிணை தொகையின்றி கல்குவாரிகள் நடத்த முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதுமிலிருந்து வீரபோயர் இளைஞர் பேரவை மற்றும் மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் தொண்டர்கள் சுமார் 10,000 நபர்கள் கலந்துகொண்டார்கள் .
எங்களது கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக பரிசீலிக்காவிட்டால் ஜனவரி முதல் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் வீரபோயர் இளைஞர் பேரவை மற்றும் மக்கள் ராஜ்ஜியம் கட்சி சார்பாக தொடர் போராட்டம் நடைபெறும் என்பதை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில்
வீரபோயர் இளைஞர் பேரவையின் மாநில தலைவர்
கோ.பாலசந்தர் ,
வீரபோயர் இளைஞர் பேரவையின் மாநில பொதுச்செயலாளர்
ஆர். ராஜேஷ்குமார் , மாநில இளைஞரணி தலைவர் எம்.கே.எஸ். மாதையன், மக்கள் ராஜ்ஜியம் கட்சியின்
மாநில பொருளாளர் கோ.பரிமளா,
வீரபோயர் இளைஞர்
பேரவை மாநில துணைத் தலைவர் ஜே.வடிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பெருந் திரளாக தமிழகத்தில் முழுவதும் உள்ள இளைஞர் அணி , மாணவர் அணி , மகளிர் அணி , தொண்டர் அணி தொழிலாளர் அணி , வர்த்தகர் அணி , அணி பொறுப்பாளர்கள் சமூக உணர்வுகளோடு போயர்களின் உரிமை குரல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இறுதியாக தென்சென்னை மாவட்ட தலைவர் பி.ரவி அவர்கள் நன்றியுரை ஆற்றினார் .
