ஸ்ரீபெரும்புதூர் :

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜோசியர் தெருவில் இயங்கி வரும் ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் ஒரு அங்கமான பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக திருமதி.ஜெயலட்சுமி அம்மாள் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புதூர்,இருங்காட்டுக்கோட்டையில் ஏழை, எளிய பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ஜெயலெட்சுமி பால கிருஷ்ணன் குழுமத்தின் தலைவர் மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவன தலைவருமான மனித நேயர் திரு.சுகுமார் பாலகிருஷ்ணன் மற்றும் துணை தலைவர் திரு.மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களுக்கு 10 கிலோ நயம் அரிசி, வேஷ்டி -சேலை மற்றும் உணவு வழங்கப்பட்டது. மேலும் இந் நிகழ்வில் நிகழ்வில் நிர்வாகிகளான செந்தில் அருள், சுரேந்திரன், துரை, ரெக்ஸ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

மேலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஜெயலட்சுமி அம்மாளின் நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்க பட உள்ளது குறிப்பிடத்தக்கது…

எஸ்.ஏ.ராஜ்குமார்

செய்தியாளர்

96 77 34 91 96