சென்னை :சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பிரிவு சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ஈகா திரையரங்கம் எதிரில் நடைப்பெற்றது.

இந் நிகழ்வில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் திரு.கண்ணன், போக்குவரத்து காவல் தெற்கு மண்டல இணை ஆணையர் திருமதி.லெட்சுமி மற்றும் போக்குவரத்து காவல் கிழக்கு மண்டல துணை ஆணையர் திரு.செந்தில்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

மேலும் ஒரு நிகழ்வாக நுங்கம்பாக்கம் பொய்கால் குதிரை சந்திப்பு அருகில் சென்னை தமிழா மற்றும் சென்னை கானா குழுவினர் கானா பாடல்கள் மூலமும்,நடனமாடியும் வித்தியாசமான முறையில் பொதுமக்களுக்கு முக கவசத்தின் அவசியத்தையும், சானிடைசர் உபயோகத்தை பற்றியும் வலியுறுத்தினர்.

இந்த நிகழ்வில் திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையர் திரு.புருஷோத்தமன், நுங்கம்பாக்கம் சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், அண்ணாசாலை, திருவல்லிக்கேணி சரக காவல் ஆய்வாளர்கள் கலந்துக் கொண்டனர்.

