சென்னை : திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள நீலம் பாஷா தர்ஹா சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

நாகூர் தர்ஹா டிரஸ்டி செய்யது முஹம்மது கலீபா சாகிப் காதிரி காஸிமி தலைமையில் உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக தர்ஹாக்கள் ஒருங்கிணைப்பு பேரவை ஒருங்கிணைப்பாளரும். நீலம்பாஷா தர்ஹா டிரஸ்டியுமான குலாப் அலி ஷா காதிரி அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். மேலும் இவ்விழாவில் திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் எம்.கே.சிவா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் சந்தன கூடு விழாவில் கலந்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசுகையில்..,

தமிழ அரசு சார்பில் ஏப்ரல், மே ஜூன் மாதங்களில் 31 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது

தொழில் வளர்ச்சி தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அரசு என்ன செய்து வருகிறது என கூட பார்க்காமல் குறை கூறி வருகிறார் எனவும், இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக விளங்கி வருகிறது எனவும்,ஜி.எஸ்.டி.வரி தமிழ் நாட்டில் இருந்துதான் அதிக அளவில் செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் இந்த முறை அதிமுக அங்கம் வகிக்கும் என நம்புகிறேன்.

இதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் நல்ல முடிவை எடுத்து அறிவிப்பார்கள் என நம்புகிறேன்.

தனிஷ்க் விளம்பரத்தில் தவறு இருப்பதாக கருதவில்லை. இஸ்லாமிய குடும்பத்தில் ஒரு இந்து பெண்மணி இருப்பது நல்லிணக்கத்தைத்தான் காட்டுகின்றன.

அதிமுக அம்மா அரசு என்றும் ஜாதி வேற்றுமை பார்க்காது எனவும் இவர் கூறினார்….