சென்னை :
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்களின் கனவை நசுக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புக்கிணங்க, மாவட்டச்செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் வேண்டுக்கோளின்படி இராயபுரம் மேற்கு பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ந.ம.தினேஷ்குமார் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!
இந்த ஆர்ப்பாட்டத்தில் இராயபுரம் மேற்கு பகுதி துணைச்செயலாளர் அ.ரவி,மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ந.ம.மகேஷ் குமார்,49வது வட்டச்செயலாளர் எல்.சீனிவாசன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஆர்.ஏகாம்பரம், பிரச்சார பீரங்கி வீரக்குமரன்,மாணவர் அணி பகுதி துணை அமைப்பாளர் பிரவீண்குமார்,தகவல் தொழில்நுட்ப பிரிவு சுதர்சன்,விக்னேஸ்,நிர்மல் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
