சென்னை :சமுதாயத்தில் விளிம்பு நிலையில் வாழும் குறிப்பாக குடிசை பகுதி மக்களின் மேம்பாட்டிற்காகவும் அப்பகுதி குழந்தைகளின் கல்வி , சுகாதாரம்,பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக அரும்பணியாற்றி வருகிறது 4 M அறக்கட்டளை என்கிற தொண்டு நிறுவனம்.

வானம் பார்த்த பூமி என்றழைக்கப்படும் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான்.வளர்ச்சி பின்தங்கிய மாவட்டத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளில் வளர்ச்சிக் காண செய்த பல்வேறு தொழில் குழுமங்களை நிறுவிய பி.எஸ்.அப்துர் ரஹ்மான் அவர்கள் பல தலைவர்களின் நன்மதிப்பை பெற்றவர்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2005 ஆண்டு பி.எஸ்.அப்துர் ரஹ்மான் அவர்களால் 4 M டிரஸ்ட் ஆரம்பிக்கப்பட்டது.

திரு.அப்துல் காதிர் அப்துர் ரஹ்மான் புகாரி அவர்களை அறங்காவலராகவும் திருமதி.
மரியம் அப்துல் காதிர் அவர்களை செயலாளராகவும் திரு.பெரியதம்பி அவர்களை திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் கொண்டு இயங்கும் 4 M டிரஸ்ட் குடிசை பகுதிகளில் வாழும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சென்னை மாவட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது

கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் சென்னை மாநகராட்சியுடன் 4 M டிரஸ்ட் இணைந்து நோய் தொற்று அதிகமுள்ள நான்கு மண்டலங்களில் தமது 350 களப்பணியாளர்களை ஈடுபடுத்தி நோய்த் தொற்றை கட்டுப்படுத்தி வருவதில் பெரும் பங்குண்டு.

மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் முன்னெடுத்து வருகிறது.
தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்கள் 4 M டிரஸ்ட் களப்பணியாளர்களின் கொரோனா தடுப்பு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து பாராட்டியதோடு 4 M டிரஸ்ட் குழுவினருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.