சென்னை :
சென்னை மாநகராட்சி திருவிகநகர் மண்டலம் அயனாவரம் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார்.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், கொரோனா தொற்று நோயில் இருந்து மீண்டு குணமடைந்தவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
மேலும் நிகழ்வின் போது மாவட்ட செயலாளர்டி.ஜி.வெங்கடேஷ்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ வி.எம்.பாபு, கொரோனா சிறப்பு அதிகாரி அரவிந்தன் ஐஏஎஸ், புளியந்தோப்பு துணை ஆணையாளர் ராஜேஷ் கண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
