திண்டுக்கல் :ஜூன், 07

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்திய நாளிலிருந்து (22.03 2020) தொடர்ச்சியாக (07.06.2020) 75ஆம் நாள் உதவியாக திண்டுக்கல் மதர் தெரசா நர்சிங் கல்லூரி தாளாளர் திருமதி லலிதா மற்றும் பசுமை பாதை தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் திண்டுக்கலில் உள்ள இந்திரா நகர் கண் பார்வையற்றோர் குடியிருப்பு மற்றும் நாகல் நகர் சந்தை நகர் பகுதியிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு அரிசி தொகுப்பு, மதிய மற்றும் இரவு உணவினை வழங்கி வருகின்றனர்.

மேலும் மதர் தெரசா நர்சிங் கல்லூரி மற்றும் பசுமை பாதை தொண்டு நிறுவனம் கொரோனா தொற்று காரணமாக பொது ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமப்புற ஏழை, எளிய மாணவ மாணவியருக்கு இலவச கல்வி அளிப்பதாக முடிவெடுத்துள்ளது.

மதர் தெரசா நர்சிங் கல்லூரியில் இலவச அட்மிஷன் பெற இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் 86 10 04 20 61