சென்னை : ஜூன், 12
தமிழ் மாநில கட்சியின் தலைவரும் முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான ஆர்.சி பால் கனகராஜ் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் அவர்கள் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.கவில் இணையும் நிகழ்வு அமைந்தகரை தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
மேலும் தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத் தலைவர் முகமது ஃபெரோஸ் மற்றும் மாற்றுக் கட்சியினர் சுமார் 50பேர் இணைந்தனர்.

இந்த இணைப்பு விழாவில் பேசிய பால் கனகராஜ், ’சுயநலத்துக்காக பா.ஜ.கவில் இணையவில்லை,பா.ஜ.க ஆட்சியில் தான் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்.
நிம்மதியான வாழ்வை அனைவருக்கும் வழங்கும் ஆட்சியாக பா.ஜ.கவின் ஆட்சி உள்ளதால் அதில் குறித்த நேரத்தில் இணைந்துள்ளேன். சாமானியர்களுக்கான ஆட்சி பாரத பிரதமர் மோடியின் ஆட்சி’’ எனத் தெரிவித்தார்.

இதில் பா.ஜ.க இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் பி.செல்வம், சென்னை கோட்ட பொறுப்பாளர் சக்ரவர்த்தி, மாவட்ட தலைவர் டால்பின் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
