சென்னை : ஜுன், 05
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தீயணைப்பு துறை சார்பில் மயிலாப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தில் மா,பலா,தேக்கு,பூவரசன்,வாழை,முருங்கை போன்ற 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திரபாபு அவர்கள் தலைமை தாங்கினார். வடக்கு மண்டல இணை இயக்குநர் ந.பிரியா ரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

தீயணைப்பு துறை குடியிருப்பு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பறவை, விலங்கினங்களுக்கு உணவு அளிக்கும் கிண்ணங்களை வழங்கினார்.

குழந்தைகளிடம் சுற்றுச்சூழல் தொடர்பான கேள்விகளை கேட்டு பதிலளித்தவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசளித்து பேசுகையில் மாணவர்கள் இயற்கையை நேசிப்பவர்களாகவும் அறிவியலை நேசிப்பவர்களாகவும் மாற வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதுக்காக்க முன்வர வேண்டும்.வருங்காலத்தில் பெரிய விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும் என்றார்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பயிற்சி மைய இணை இயக்குநர் சாகுல்ஹமீது அவர்கள் நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை மயிலாப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமதாஸ் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட அலுவலர் சையது முகமது ஷா, துணை மாவட்ட அலுவலர் பொன். மாரியப்பன் உள்ளிட்ட சென்னையிலுள்ள தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.