சென்னை :தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமைச் சங்கம் ( பழங்குடி பிரிவு) திருவல்லிக்கேணி சார்பில் தொடர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி,மளிகைப்பொருட்கள், காய்கறி உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஹபிபுல்லா தெருவில் அமைந்துள்ள குருமன்ஸ் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் சரவணன்,நடிகர் விக்னேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று நிவாரணப்பொருட்களை வழங்கினர்.தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமைச்சங்கத்தின் பொதுச்செயலாளர் தனசேகரன்(எ) அழகு தனா மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கிருமிநாசினி கையுறை,முக கவசம் வழங்கி சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
