சென்னை : மே, 26

தமிழக விவசாயிகள் அனுபவித்து வரும் இலவச மின்சாரத்தை பறிக்கும் மத்திய அரசையும், அதை தடுத்து நிறுத்த துணிவற்ற மாநில அரசையும் கண்டித்து வடசென்னை மாவட்ட எஸ்.சி துறை சார்பாக பெரம்பூர் மற்றும் திரு.வி.க நகர் தொகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாநில எஸ்.சி துறை துணைத் தலைவர் நா.கிஷோர்குமார் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் நடைப்பெற்றது.

இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் புத்தநேசன், மண்டல ஆலோசகர் மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் சென்னை சிவா, பொதுச் செயலாளர் புரட்சி சந்திரன், திருவிக தொகுதி தலைவர் அம்பேத் சரவணன்,பெரம்பூர் தொகுதி தலைவர் அருள் மற்றும் தொகுதி நிர்வாகிகள் ஜோசப், சீனா முருகன்,மூர்த்தி, தாமரைச்செல்வி,விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.