திருவொற்றியூர் : மே,24

கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் மற்றும் தொழிலதிபர் கே.கார்த்திக் ஆகியோர் சமூக நோக்குடன் சென்னை திருவொற்றியூர் 14வது வட்டத்தில் உள்ள ஒண்டி குப்பம் பகுதிகளில் உள்ள மூத்த குடிமக்கள், வாழ்வாதாரம் இழந்து வசித்து(தவித்து) வரும் சுமார் 300 ஏழை எளிய மீனவ குடும்பகளுக்கு 5 கிலோ அரிசி தொகுப்பை வழங்கினர்.

இதில் முன்னாள் கவுன்சிலர் இ.வேலாயுதம் எஸ்.பி.புகழேந்தி, விம்கோ கே.லெனின், போட்டோ செந்தில்,குமார் உள்ளிட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

ராஜ்குமார் – செய்தியாளர்
(யுகம் நியூஸ்)