சேமியாவில் நஞ்சைக் கலக்கும் பிரபல சேமியா தயாரிப்பு நிறுவனத்தை மூட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த தமிழ் தேசிய கட்சி தலைவர் தமிழ்நேசன்

தமிழகத்திலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல சேமியா தயாரிப்பு நிறுவனமான அணில் சேமியா நிறுவனத்தை உடனடியாக மூட வேண்டும். சேமியாவில் நஞ்சைக் கலக்கும் சேமியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுகுமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ள தமிழ் தேசியக் கட்சி தலைவர்

இந்த நிறுவனத்தில் தயாரிக்கபடும் சேமியாவில் யூரியா அஜினமோட்டோ போன்ற மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் சேர்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி அணில் சேமியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகள் செய்துதர படாமல் இருக்கிறது. சுமார் 500க்கும் மேற்பட்டோர் வேலை செய்யக்கூடிய நிறுவனத்தில் கழிப்பிட வசதியோ, உணவு உண்பதற்கு ஓய்வு எடுப்பதற்கு எந்தவித வசதிகளும் செய்து தரப்படவில்லை.

8 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்ற தொழிலாளர் சட்டத்தை மீறி எந்த நிறுவனத்தில் 10 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை தொழிலாளர்கள் வேலை செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள் இந்த நிறுவனத்தில் இதுவரை நிரந்தரப் பணியாளர்கள் இல்லை.

கர்ப்பிணி பெண்களுக்கு 2 மாதங்கள் விடுமுறை அளித்து ஊதியம் வழங்க வேண்டும் என்ற தொழிலாளர் சட்டத்தை மீறி கர்ப்பிணி பெண்கள் வேலையில் இருந்து நீக்க படுகிறார்கள். அதேபோல் இளம்பெண்களுக்கு அதிகாரிகளால் பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுகிறது

தொழிலாளர்கள் வேலை செய்யும் பகுதிகளிலேயே பாய்லர் போன்ற ஆபத்தான இடங்கள் இருப்பதால் சிறு விபத்து ஏற்பட்டாலும் தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் இந்நிலையில் அவர்களுக்கு எந்தவிதமான முதலுதவி செய்வதற்கான வசதிகள் இல்லாமல் இருக்கிறது.

ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் அங்கு உள்ள நீர்நிலைகளை மாசுபடுத்தி இதன் மூலம் கால்நடைகள் இழப்பும் ஏற்படுகிறது.

பாய்லர்களில் தேங்காய் மட்டை நிலக்கரி போன்றவை பயன்படுத்தி எரியூட்டபடுவதால் அதிக அளவில் புகை உண்டாகி சாம்பல் வெளியேறுவதன் மூலம் அதிக விபத்துகள் ஏற்படுகிறது இவ்வாறு விலங்குகளுக்கும், மனித உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய இந்த அணில் சேமியா நிறுவனத்தை தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதாக கட்சியின் தலைவர் தமிழ்நேசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.