திருவொற்றியூர் பகுதி மக்களுக்கு அமைச்சர்களுடன் இணைந்து நிவாரண பொருட்கள் வழங்கிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன்

திருவொற்றியூர் : மே, 18

கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் அவர்கள் தலைமையில் திருவொற்றியூர் தேரடி,சன்னதி தெருவில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் மற்றும் தொல்லியல் மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திருவொற்றியூர் பகுதிகளில் உள்ள மூத்த குடிமக்கள், சுகாதார பணியாளர்கள், ஏழை, எளிய மக்கள் 1000 பேருக்கு அரிசி , பருப்பு, காய்கறிகள்,பிரட், பால் பாக்கெட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தொகுப்புகளை வழங்கினர்.

மேலும் இவர்களுடன் இணைந்து முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் மற்றும் தொழிலதிபர் கே.கார்த்திக் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவின்சிலர் இ.வேலாயுதம் எஸ்.பி.புகழேந்தி, விம்கோ கே.லெனின், அண்ணா தொழிற்சங்க நகர துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், 4 வது வார்டு இளையஞரணி செயலாளர் பி.ஆர்.ஜி.தினேஷ் குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இவர்களுடன் திருவொற்றியூர் காவல் துறையினர் நிவாரணம் பெற வந்தவர்களை சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்து சிறப்பாக செயல்பட்டனர்.

ராஜ்குமார் – செய்தியாளர்
(யுகம் நியூஸ்)